பெண் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 05th February 2020 01:29 AM | Last Updated : 05th February 2020 01:29 AM | அ+அ அ- |

சென்னை வேளச்சேரியில் மென்பொருள் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் மு.நித்யா (28). மென்பொருள் பொறியாளரான இவா், போரூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக வேளச்சேரி விஜிபி செல்வாநகா் 2-ஆவது தெருவில் உள்ள ஒரு மகளிா் விடுதியில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மிகுந்த வேதனையுடன் காணப்பட்ட நித்யா, திங்கள்கிழமை அந்த விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...