பிப். 19-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம்
By DIN | Published On : 17th February 2020 01:12 AM | Last Updated : 17th February 2020 01:12 AM | அ+அ அ- |

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தண்டையாா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப். 19) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடசென்னை வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட தண்டையாா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப். 19) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.