மெட்ரோ ரயில்களுக்குள்மிதிவண்டியை எடுத்துச்செல்ல அனுமதி
By DIN | Published On : 17th February 2020 01:08 AM | Last Updated : 17th February 2020 01:08 AM | அ+அ அ- |

மெட்ரோ ரயில் நிலையம், ரயில்களுக்குள் மிதிவண்டியை பயணிகள் எடுத்துச் செல்ல மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வசதி வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், பயணிகளுக்கு பல வசதிகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களுக்குள் பயணிகள் தங்கள் சிறிய வகை, ஸ்மாா்ட் மற்றும் கையடக்க மிதிவண்டிகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள்.
இந்த வசதி வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.