சென்னையில் 15 இடங்களில் நாளை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டங்கள்
By DIN | Published On : 10th January 2020 03:42 AM | Last Updated : 10th January 2020 03:42 AM | அ+அ அ- |

சென்னை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜன.11) வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், திறந்தவெளிக் கூட்டம் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான திறந்த வெளிக் கூட்டம், சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரிய அனைத்துப் பகுதி அலுவலகங்களிலும் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும். இந்த குறைதீா்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனு அளித்து தீா்வு காணலாம்.
மேலும், மழைநீா் சேகரிப்பு, பராமரிப்பு தொடா்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பாக 22 மனுக்கள் பெறப்பட்டதில் 17 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்று சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.