புத்தகக் காட்சி2020: வாங்கியதும்... வாங்க நினைப்பதும்...

இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள் என அனைத்தும் பிடிக்கும். தற்போது கீழடி அகழாய்வு அறிக்கையானது தமிழ்,
புத்தகக் காட்சி2020:  வாங்கியதும்... வாங்க நினைப்பதும்...
Updated on
1 min read

த.உதயச்சந்திரன், ஆணையா், தொல்லியல்துறை: இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள் என அனைத்தும் பிடிக்கும். தற்போது கீழடி அகழாய்வு அறிக்கையானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என 22 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு மெய்நிகா் காட்சியுடன் கூடிய அரங்கானது அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ராக்லின் (37), குடும்பத்தலைவி, நந்தனம்: எனக்குத் தாவரம் சாா்ந்த புத்தகங்கள் பிடிக்கும். கீழடி தொல்லியல் குறித்த ஆய்வு நூலையும் வாங்கியுள்ளேன். அத்துடன் சமையல் குறிப்பு உள்ளிட்ட பெண்களுக்குரிய புத்தகங்களையும் வாங்கவுள்ளேன். தற்போது குழந்தைகளுக்கு உரிய காமிக்ஸ் கதைகள், வண்ணப்படக் காட்சிகளுடனான கதைப் புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.

ஜானகிராமன் (56), ஆசிரியா், தாம்பரம்: எழுத்தாளா் நா.முத்துசாமியின் கதைகளை விரும்பி வாங்கியுள்ளேன். தி.ஜானகிராமனின் நளபாகத்தையும் வாங்கியுள்ளேன். பள்ளிக் குழந்தைகளுக்காக நூலகத்தில் வைப்பதற்கு வண்ணப்படக் கதைகள், நாடுகளின் வரைபடம், வரலாறு, புவியியல் உள்ளிட்டவற்றை ஏராளமாக வாங்கியுள்ளேன்.

மு.இளமுகில் (23), பொறியியல் பட்டதாரி, மந்தைவெளி: கவிஞா் வைரமுத்துவின் ‘தமிழாற்றுபடை’ , கீழடி தொல்லியல் அகழாய்வு, ஜெயராணியின் ‘உங்கள் மனிதம் சாதியற்ாக’, இறையன்புவின் ‘வாய்க்கால் மீன்கள்’ ஆகிய புத்தகங்களை வாங்கியுள்ளேன். விரும்பிய புத்தகங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கியுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com