சர்வோதய இலக்கியப் பண்ணை

கடந்த 1970-ஆம் ஆண்டு மதுரையில் காந்தியத் தொண்டர்களான சர்வோதய அமைப்பைச் சேர்ந்த க.மு.நடராஜன், பாண்டியன், க.மாரியப்பன் உள்ளிட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட பதிப்பகம்.
சர்வோதய இலக்கியப் பண்ணை

கடந்த 1970-ஆம் ஆண்டு மதுரையில் காந்தியத் தொண்டர்களான சர்வோதய அமைப்பைச் சேர்ந்த க.மு.நடராஜன், பாண்டியன், க.மாரியப்பன் உள்ளிட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட பதிப்பகம். ஆரம்பத்தில் காந்தியடிகளின் கொள்கை விளக்கப் பிரசார நூல்களை வெளியிட்ட இலக்கியப் பண்ணையானது நாளடைவில் அவரது சுயசரிதையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது. காந்தியடிகளின் சத்தியசோதனையானது ஆண்டுதோறும் 20 ஆயிரம் பிரதிகள் விற்கப்படுகின்றன. 
இதுவரை காந்தியடிகளின் சரித்திரம், கொள்கைகள் சார்ந்து 150- க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வினோபாஜியின் கொள்கைகள் மற்றும் வரலாறுகளையும் வெளியிட்டுள்ளது. சென்னை புத்தகக் காட்சிக்காக மகாத்மா காந்தி, மதுரையில் காந்தியடிகள், கோபாலகிருஷ்ண கோகலேவும் காந்தியடிகளும், அதிசய சோதனை, வினோபாஜியும் காந்தியும், மகாகவியும் மகாத்மாவும் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வோதய இலக்கியப் பண்ணையில் தற்போது இளைஞர்களுக்காக பிற பதிப்புகள் வெளியிடும் மேம்பாட்டு நூல்களும் விற்கப்படுவதாக பதிப்பக நிர்வாகி புருஷோத்தமன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com