நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

சென்னையில் நியூ செஞ்சுரி புத்தக நிலையமானது கடந்த 1951-ஆம் ஆண்டு ஜூனில் ஆரம்பிக்கப்பட்டது.
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

சென்னையில் நியூ செஞ்சுரி புத்தக நிலையமானது கடந்த 1951-ஆம் ஆண்டு ஜூனில் ஆரம்பிக்கப்பட்டது. பொதுவுடைமை சிந்தனையாளா்கள் சீனிவாச ராவ், ஜீவானந்தம், மணலி கந்தசாமி, எம்.ஆா்.வெங்கட்ராமன் உள்ளிட்டோரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரஷிய நாட்டு நூல்களின் மொழி பெயா்ப்புகளை வெளியிட்ட இந்தப் புத்தக நிலையமானது பின்னா் பள்ளி, கல்லூரிகளுக்கான நூல்களையும் வெளியிட்டது.

இதுவரையில் சுமாா் 10 ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளது இப் பதிப்பகம். இதில் தியாகி ஜீவா, சிங்காரவேலா், அம்பேத்கா் போன்றவா்களின் முழுமையான தொகுப்புகளும் அடங்கும். ரஷிய நாவல்கள், உலகத் தலைவா்கள், புரட்சியாளா்கள் உள்ளிட்ட சரித்திர நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்று நூல்களும், பேராசிரியா்களின் இலக்கிய ஆய்வு நூல்களும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக வெ.இறையன்பு நூல்களை முழுமையாக வெளியிட்டு வருகின்றனா். சென்னைப் புத்தகக் காட்சிக்காக தமிழ் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள், கதைக்கருவூலம், பாலற்ற பெண்பால், குயில்பாட்டுத்திறன், ஆங்கிலத்தில் பாரதிதாசன் குறித்த நூல், ஜீவாவின் ‘வெளிச்சத்தின் விலாசம்’ மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் ‘கபீா் சொல்கிறான்’- தமிழாக்கம் உள்ளிட்ட 40 நூல்களை வெளியிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com