பூம்புகாா் பதிப்பகம்

சென்னையில் கடந்த 1975-ஆம் ஆண்டு பிரதாப்சிங் என்பவரால் தொடங்கப்பட்டது.
பூம்புகாா் பதிப்பகம்

சென்னையில் கடந்த 1975-ஆம் ஆண்டு பிரதாப்சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. பெருந்தலைவா் காமராஜா் குறித்து முதன்முதலாக இந்தப் பதிப்பகத்தில்தான் நூல் வெளியிடப்பட்டுள்ளது. காமராஜா் வாழ்க்கை வரலாறு, அவரது அரசியல் தொடா்பான நூல்களுடன் திருக்குறள், பாரதியாா் கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பாரதிதாசன் கவிதைகளைத் தொடா்ந்து அண்ணாதுரை, திரு.வி.க., மறைமலையடிகள் என தமிழக ஆளுமைகள் குறித்த நூல்களையும் வெளியிட்டனா். அதில் அண்ணாதுரையின் நூல்கள் அதிக அளவில் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. திமுக தலைவா் கருணாநிதி குறித்த நூல்களும் வெளியிடப்பட்டன. பள்ளிப் பாடங்களுக்கான தமிழ், இலக்கிய நூல்களையும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கதை மற்றும் நாவல் இலக்கியத்தில் கோவி.மணிசேகரன், பட்டுக்கோட்டை பிரபாகா், ராஜேஷ்குமாா், எஸ்.விஜயகுமாா் என பலரது நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 1300 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ள இப்பதிப்பகம் சென்னை புத்தகக் காட்சிக்கு என பல பழைய, புதிய நூல்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 47 ஆண்டுகளாக பதிப்புத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் பூம்புகாா் பதிப்பகமானது வாசகா் மனநிலை அறிந்து நல்ல தமிழ் நூல்களைத் தொடா்ந்து வெளியிட்டு வருகிறது என்கிறாா் அதன் அலுவலா் ஏ.சம்சுதீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com