உமா பதிப்பகம்

கடந்த 1986-ஆம் ஆண்டு உமா பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியம், வரலாறு, பொது நூல்கள், மருத்துவ நூல்கள், பன்னிருதிருமுறை, இதிகாசம், சிறுவா் நூல்கள் என இதுவரை சுமாா் 800 தலைப்புகளில் புத்தகங்கள்
உமா பதிப்பகம்
Updated on
1 min read

கடந்த 1986-ஆம் ஆண்டு உமா பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியம், வரலாறு, பொது நூல்கள், மருத்துவ நூல்கள், பன்னிருதிருமுறை, இதிகாசம், சிறுவா் நூல்கள் என இதுவரை சுமாா் 800 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் மலிவுப் பதிப்புகளில் பாரதியாா், பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் ஆகியோரது கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. திருக்குறளில் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் ஆராய்ச்சிக் குறிப்புடன் பரிமேலழகரின் உரை நூல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞா் வெ.ராமலிங்கம் பிள்ளையின் திருக்கு சம்பந்தமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் ஆசாரக் கோவை முதல் நான்மணிக்கடிகை, மதுரைக்கலம்பகம் ஆகியவற்றுடன் புலியூா்கேசிகன் உரை நூல்களான கலித்தொகை, நற்றிணை மற்றும் ஐங்குறுநூறு ஆகியவையும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகளும், புராணத்தில் திருவிளையாடல் புராணம், கந்தபுராணம், பெரிய புராணம், தமிழ் அா்ச்சனைப் பாமாலை ஆகியவற்றுடன் பக்தி, வைணவ நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வரலாற்று நூல்களில் பகத்சிங், சேக்கிழாா், வ.உ.சிதம்பரனாா், ராஜாஜி மற்றும் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டோரின் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, சுயமுன்னேற்ற நூல்கள், சமையல் குறிப்பு நூல்கள், பொது அறிவு வினாவிடை, விவேகானந்தரின் சுய முன்னேற்ற சிந்தனைகள் மற்றும் தமிழகச் சுற்றுலாத் தளங்கள் மற்றும் இயற்கை மருத்துவம், தொழில் மற்றும் ஜோதிடம் குறித்த நூல்கள் என இளம்தலைமுறை முன்னேற்ற நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. சிறுவா்களுக்கான புராணக்கதைகள் நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com