சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கடந்த 1920-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் வ.திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை மற்றும் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
Updated on
1 min read

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கடந்த 1920-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் வ.திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை மற்றும் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. தற்போது நூற்றாண்டைக் கண்ட இப்பதிப்பகமானது தமிழையும், சைவத்தையும் வளர்க்கும் நோக்கிலே தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழறிஞர் மறைமலையடிகளின் அனைத்து நூல்களையும் இப்பதிப்பகம் சார்பில் வெளியிட்டுள்ளனர். 

சங்க இலக்கிய நூல்களாக ஒளவை துரைச்சாமி, வேங்கடசாமி நாட்டார், பொ.வே.சோமசுந்தரனார்  ஆகியோரின் உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. சங்க இலக்கிய மாநாடுகளை பதிப்பகம் சார்பில் நடத்தி அதைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டுள்ளனர். 

பதிப்பகம் சார்பில் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் 14 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கத்திய அறிஞர் ஜேம்ஸ் ஆலனின் அனைத்து நூல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பதிப்பக சிறப்பு வெளியீடுகளாக  திருமந்திரம், ராமநாதபிள்ளை உரையுடன் கூடிய திருவாசகம், கழகத் தமிழ் அகராதிகள், பேராசிரியர் அப்பாத்துரையின் ஆங்கிலம்-தமிழ் அகராதி என இதுவரை சுமார் 3 ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பதிப்பக உரிமையாளர் எம்.சுப்பையா முத்துகுமாரசாமி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com