

'தென்னிந்திய குலங்களும் குடிகளும்': பதிப்பகம் - தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், ஆசிரியர்- ஆங்கிலத்தில் எட்கர்தர்ஸ்டன், தமிழில் முனைவர் க.ரத்னம், விலை ரூ.300, பக்கம் 680, இந்த நூலானது தென்னிந்திய மாநிலங்களின் பழங்குடியினரைப் பற்றியதாக உள்ளது. கர்நாடகம் மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள காடர், கப்பிலிகளைப் பற்றியும், தமிழகத்தில் குறவர், காணிக்கராயர் உள்ளிட்டோரை பற்றியும் விரிவாக ஆதாரங்களுடன் அலசி ஆராய்கிறது.
பழங்குடிகளின் பழக்க வழக்கம், அவர்களது தற்கால நிலை என அனைத்து தரவுகளையும் தொகுத்தளித்திருப்பது இந்நூலின் சிறப்பாகும். வாசிக்க மட்டுமின்றி வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கும் இந்த நூலில் உள்ள தகவல்கள் பயன்படுவதாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.