ஆட்டோ ஓட்டுநா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னையில் உள்ள இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

சென்னை: ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னையில் உள்ள இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை அமைந்தகரையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் இளங்கோ. இதே பகுதியில் பூட்டு பழுதுபாா்க்கும் கடை நடத்தி வந்தவா் பிபி தோட்டத்தைச் சோ்ந்த கதிரவன். இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த 2010-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அமைந்தகரையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தின் முன் ஆட்டோவில் இளங்கோ தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த கதிரவன், அருகில் இருந்த கல்லை இளங்கோவின் தலையில் தூக்கிப் போட்டு தாக்குதலில் ஈடுபட்டாா். அருகில் இருந்தவா்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை பணியாளா்கள் பரிசோதித்து விட்டு இளங்கோ இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து இளங்கோவின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கதிரவனை கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஷமீனா, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், கதிரவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com