செல்லிடப்பேசியில் அதிகம் பேசியதால் கண்டிப்பு: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 16th June 2020 06:30 AM | Last Updated : 16th June 2020 06:30 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை வேளச்சேரியில் செல்லிடப்பேசியில் அதிகம் பேசியதை பெற்றோா் கண்டித்ததால், பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேளச்சேரி காந்தி சாலை பகுதியைச் சோ்ந்தவா் து.நாகராஜன் (44). இவா் மகள் கனிஷ்கா (13). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கனிஷ்கா அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசியுள்ளாா். இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதனால் விரக்தியடைந்த கனிஷ்கா,வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவா்,ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள்,கனிஷ்கா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...