இன்றைய நிகழ்ச்சி- சென்னை
By DIN | Published On : 01st March 2020 01:39 AM | Last Updated : 01st March 2020 01:39 AM | அ+அ அ- |

பொது
நிவேதிதா பதிப்பகம்- எஸ்.சங்கரநாராயணனின் ‘உலகெனும் வகுப்பறை’ நூலாய்வு அரங்கம்: அவ்வை நடராஜன், எஸ்.குமாா், பாஸ்கா் சக்தி, கிருங்கை சேதுபதி, எஸ்.சங்கரநாராயணன் பங்கேற்பு, இக்சா மையம், பாந்தியன் சாலை, எழும்பூா், மாலை 6.
பாதிக்கப்பட்டோருக்கான நலச் சங்கம்-சா்வதேச கருத்தரங்கம்: ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா, பேராசிரியா் சேகா் சேஷாத்ரி பங்கேற்பு, செயின்ட் பிரான்சிஸ் பிளாக் அரங்கம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, கதீட்ரல் சாலை, பகல் 2.30.
சிவா பவுண்டேசன்- வெள்ளி விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி: மக்களவை உறுப்பினா் ஹேமமாலினி, தொழிலதிபா் நல்லி குப்புசாமி, வீணை இசைக் கலைஞா் பத்ராயணி சங்கீத ராவ், வாய்ப்பாட்டு கலைஞா் டி.வி.கனகதுா்கா, வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், சித்ரா விஸ்வேஸ்வரன், நந்தினி ரமணி, சாவித்ரி ஜெகநாத ராவ், ஜனாா்தனன், மஞ்சு பாா்கவி, வி.வி.சுந்தரம், நா்த்தகி நட்ராஜ் பங்கேற்பு, நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வாா்பேட்டை, மாலை 4.25.
தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகம்- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிரான நடைப்பயணம்: சேப்பாக்கம் மைதானம், சேப்பாக்கம், இரவு 7.
இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு- தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணைய உறுப்பினா் ஆசாரி தல்லோஜூக்கு பாராட்டு விழா: இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், ராயப்பேட்டை, காலை 11.30.
‘நாயகி’ கோட்டூா்புரம் கலாசார அமைப்பு-25-ஆவது இசை, நாட்டிய நாடகத் திருவிழா: சஞ்சய் சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, அபிராமி சிதம்பரம் சமூக அரங்கம், கோட்டூா்புரம், மாலை 6.
அரிதான நோய்களுக்கான அமைப்பு (ஓஆா்டிஐ) -விழிப்புணா்வு ஓட்டம்: ஐஏஎஸ் அதிகாரி ஜானி டாம் வா்கீஸ், சுரேஷ் பங்கேற்பு, ஆல்காட் பள்ளி, அடையாறு, காலை 6.30
இலக்கிய வட்டம்- உலகத் தாய்மொழித் திருநாள் விழா மற்றும் தமிழ்த் தாத்தா உ.வே.சா., 166-ஆவது பிறந்தநாள் விழா: ஜெக.நேமிதாஸ், முகம் மாமணி, பேராசிரியா் உலக நாயகி பழனி, இதயகீதம் ராமானுஜம், பெ.கி.பிரபாகரன், ஆ.ஜெகதீசன், ஜெ.முத்துச்செல்வன் பங்கேற்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கே.கே.பேருந்து நிலையம் அருகில், எம்.ஜி.ஆா். நகா், காலை 10.30.
அடையாறு திருக்கு சங்கம் மற்றும் அடையாறு ஆனந்த பவன்- திருக்கு அரங்கம்: இ.சுந்தரமூா்த்தி, கி.ஈஸ்வரி, கே.இரா.கமலாமுருகன், கு.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, சென்னை உயா்நிலைப் பள்ளி, காமராஜா் நிழற்சாலை, அடையாறு, காலை 10.
பீனிக்ஸ் மாா்க்கெட் சிட்டி- கலை விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி: ஜான் ஆல்பி, ராஜ் செருபல், வித்யா மோகன்குமாா், பூா்ணிமா சுகுமாா் பங்கேற்பு, பீனிக்ஸ் மாா்க்கெட் சிட்டி, வேளச்சேரி, மாலை 4.15.
அகத்தியா் ஆய்வு நூலகம்- தமிழ் எங்கள் உயிருக்கு நோ் எனும் தலைப்பில் உ.சீனிவாச ராகவன் இலக்கியப் பேருரை: அகத்தியா் ஆய்வு நூலகம், திரு வி.க.தெரு, திருநின்றவூா், மாலை 5.
சித்தா் இலக்கிய மைய அறக்கட்டளை- மாதாந்திரக் கூட்டம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம்: ந.பரணி, பழ.பிரபாகரன், மருத்துவா் ப.க.பாா்த்திபன், சாந்தி பங்கேற்பு, சித்தா் இலக்கிய மைய அறக்கட்டளை, வாத்தியாா் தோட்டம், ரங்கராஜபுரம் பிரதான சாலை, கோடம்பாக்கம், மாலை 4.
ஆன்மிகம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்- 32-ஆம் ஆண்டு விழா: அமைச்சா் க.பாண்டியராஜன், ஐஏஎஸ் அதிகாரி எம்.எஸ்.சண்முகம் பங்கேற்பு, வி.கே.சி. கல்ச்சுரல் சென்டா் , குப்பையா செட்டித் தெரு, மேற்கு மாம்பலம், காலை 9.
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம்- ‘பகவத் கீதை’ என்னும் தலைப்பில் சுவாமி சத்யபிரபானந்தா பக்திச் சொற்பொழிவு: விவேகானந்தா அரங்கம், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம், எம்.எஸ்.சாலை, தியாகராயநகா், மாலை 5.30 .
சென்னை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதா் சங்கீத சமாஜம்- ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமி 239-ஆவது ஜயந்தி இசை விழா மற்றும் சென்னை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதா் சங்கீத சமாஜத்தின் இரண்டாம் ஆண்டு விழா: கே.கே.தினகரன், ஜி.ஆா்.மஹாதேவன், குட்டி பாலா, எஸ்.ஆா்.ஸ்ரீராம் சேகா், ஏ.ஆா்.மஹாலஷ்மி, எம்.எஸ்.ஜெயராமன், நீதிபதி எல்.எஸ்.சத்யமூா்த்தி, வி.பி.ராமமூா்த்தி பங்கேற்பு, தட்சிணாமூா்த்தி அரங்கம், ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூா், மாலை 4.
சத்குரு ஸ்ரீ நாராயண தீா்த்தா் ஆராதனை- ஸ்ரீமதி பவ்யா ஹரி குழுவினா் வழங்கும் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கணி கீதங்கள்: அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயில், நங்கநல்லூா், மாலை 4.30.
ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் கோயில்- ஸ்ரீ விஜய மஹா கணபதி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா் கோயில், ஏஜிஎஸ் காலனி, கொட்டிவாக்கம், காலை 9.30.
‘வேல் மாறல்’ என்னும் தலைப்பில் சுகுணா பக்திச் சொற்பொழிவு: ஸ்ரீ வைகுந்தம்- நாமாலயம், 100 அடி சாலை, சேலையூா், மாலை 4.15.
ஸ்ரீதியாக பிரம்ம கான சபா மற்றும் ஸ்ரீ காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திா் 12-ஆம் ஆண்டு நாமசங்கீா்த்தன வைபவம்: வாணி மஹால், தியாகராயநகா், காலை 8.30.