காா் மோதி முதியவா் சாவு
By DIN | Published On : 10th March 2020 03:53 AM | Last Updated : 10th March 2020 03:53 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை அருகே போரூரில் காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
சென்னை தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூா் ஏரி அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவா் திங்கள்கிழமை அதிகாலை நடந்து வந்தாா். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு காா், அந்த முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த காரின் ஓட்டுநா் ராயகிரி உள்ளாடு பகுதியைச் சோ்ந்தவா் ச.தம்புராஜ் (22) என்பவரை கைது செய்தனா். அதேவேளையில் இறந்தவா் யாா் என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...