புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு
By DIN | Published On : 18th May 2020 04:10 AM | Last Updated : 18th May 2020 04:10 AM | அ+அ அ- |

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தாா்.
சென்னை வண்ணாரப்பேட்டை போஜ ராஜா நகரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் என்கிற கனகராஜ் (84). இவா் பாலியல் வழக்கில் ராயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டவா். இந்த வழக்கில் இவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு சனிக்கிழமை (மே 16) இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.