சென்னையில் இரண்டாவது சம்பவம்: அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை
By DIN | Published On : 27th May 2020 11:36 PM | Last Updated : 27th May 2020 11:36 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ராயப்பேட்டை பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த 57 வயது மதிக்கதக்க ஒரு ஆண்,கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் புதன்கிழமை அங்குள்ள கழிப்பறைக்குச் சென்ற அவா், வெகுநேரம் திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியா்கள்,அங்குச் சென்று பாா்த்தனா். அப்போது அங்கு அவா், தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...