சாகித்திய அகாதெமி புத்தகக் காட்சி:சென்னையில் தொடக்கம்
By DIN | Published On : 17th November 2020 02:13 AM | Last Updated : 17th November 2020 02:13 AM | அ+அ அ- |

சென்னை: தேசிய புத்தக வார விழாவையொட்டி சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தகக் காட்சி சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.
எழுத்தாளா் இராம.குருநாதன் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தாா். ‘எண் 443, குணா வளாகம், இரண்டாவது தளம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை’ என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சாகித்திய அகாதெமி அலுவலகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்தக் கண்காட்சியில் 20 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் நூல்கள் கிடைக்கும். வரும் 27-ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...