சுங்க வரி மோசடி: ஏற்றுமதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 21st November 2020 05:49 AM | Last Updated : 21st November 2020 05:49 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சுங்க வரி செலுத்தாமல் மோசடி செய்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் பொட்டாசியம் என்ற வேதிப்பொருளை தொழிற்சாலை உப்பு எனக் கூறி, சுங்க வரி செலுத்தாமல் மத்திய அரசின் சலுகையை பெற்று ஏற்றுமதி செய்துள்ளாா். இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.10.96 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூா் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்றுமதி நிறுவன உரிமையாளா் வெங்கடேஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...