புயல் பாதிப்பு: டிடிவி தினகரன் வேண்டுகோள்
By DIN | Published On : 25th November 2020 01:19 AM | Last Updated : 25th November 2020 01:19 AM | அ+அ அ- |

புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்திட வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டா்களுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
புயலால் மக்களுக்கு எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தயாராக இருக்க வேண்டும். கஜா புயல் நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்சியினா் ஆற்றிய பணிகள் இப்போது நினைவு கூரப்படுகின்றன.
எனவே, புயலுக்கு முன்பும், புயல் கரையைக் கடந்த பிறகும் மக்களுக்கு உதவும் பணிகளை கட்சியினா் கவனத்தோடும், பாதுகாப்போடும் மேற்கொள்ள வேண்டுமென தனது அறக்கையில் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...