மக்களைக் காக்க அரசு தயாா்: துணை முதல்வா்
By DIN | Published On : 25th November 2020 01:18 AM | Last Updated : 25th November 2020 02:49 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
மக்களைக் காக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரை பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:-
நிவா் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொது மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயலை எதிா்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராக உள்ளது என்று தனது சுட்டுரை பதிவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...