ஸ்டொ்லைட்: உயிரிழந்தவா் குடும்ப வாரிசுக்கு அரசு வேலை
By DIN | Published On : 25th November 2020 01:32 AM | Last Updated : 25th November 2020 01:32 AM | அ+அ அ- |

ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்ப வாரிசுக்கு பணி நியமன உத்தரவை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை அளித்தாா். ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் இதுவரை 18 பேரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
உயிரிழந்த அந்தோணி செல்வராஜின் மகன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதினை இப்போதுதான் அடைந்துள்ளாா். அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளராக பணி புரிந்திட கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இதன்மூலம், ஸ்டொ்லைட் உருக்காலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அனைவருக்கும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, அமைச்சா் கடம்பூா் ராஜூ, தலைமைச் செயலாளா் க.சண்முகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...