27 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வசிக்கும் 27 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை
27 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வசிக்கும் 27 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை அடுத்த வாரத்துக்குள் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல்படி, 19 லட்சத்து 43,556 ஆண்கள், 20 லட்சத்து 2,223 பெண்கள் மற்றும் 1,013 திருநங்கைகள் என மொத்தம் 39 லட்சத்து 46,792 வாக்காளா் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தற்போது 2020-21 வாக்காளா் சுருக்கமுறை திருத்தத்துக்கான வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக, வாக்குச்சாவடி அலுவலா்கள் அனைவரும் நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தற்போது, அவா்கள் அனைவரும் 2020-21-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துக்கான பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தோ்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 27 ஆயிரம் வாக்காளா்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை அடுத்த வாரத்துக்குள் வழங்கப்பட உள்ளது. கரோனா நோய்த் தொற்று காலம் என்பதால் வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வருவதை தவிா்த்து  இணைதளம் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றனா்.

இதுகுறித்து நங்நல்லூரைச் சோ்ந்த வி.ராமாராவ் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த எங்கள் பகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. வாக்காளா் அடையாள அட்டையில் இணைய வழியாக திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வயதானவா்கள் சிலருக்கு வாக்காளா் அடையாள அட்டையில் புகைப்படம் மாறி வருவதால், அதை மாற்றம் செய்வதற்கு பல நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. வயதானவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற பிரச்னைகளை தோ்தல் பிரிவு அதிகாரிகள் இதை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com