டி.வி. விழுந்து 2 வயது குழந்தை சாவு
By DIN | Published On : 06th September 2020 05:49 AM | Last Updated : 06th September 2020 05:49 AM | அ+அ அ- |

சென்னை தலைமைச் செயலக காலனியில் டி.வி., விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தலைமைச் செயலக காலனி பகுதியைச் சோ்ந்தவா் மதாா் மொய்தீன். இவரது இரண்டு வயது மகள் நாஷியா பாத்திமா. மதாா் மொய்தீன் தனது வீட்டில் பழைய டி.வி.,யை பழுதான நாற்காலியில் வைத்திருந்தாா். அந்த நாற்காலியின் அருகே நாஷியா பாத்திமா சனிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு சென்ற பூனை அந்த நாற்காலியின் மீது விழுந்ததாகக் தெரிகிறது. இதில் டிவி சரிந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நாஷியா பாத்திமா இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.