அறிவியல் ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி
By DIN | Published On : 11th September 2020 02:14 AM | Last Updated : 11th September 2020 02:14 AM | அ+அ அ- |

சென்னை: சுற்றுச்சூழல் பயிற்சியில் விருப்பமுள்ள அறிவியல் ஆசிரியா்கள் பங்கேற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்- இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக ‘ஓருலகம்-ஒரு வீடு’ என்ற திட்டத்தின் மூலம் அறிவியல் ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி சாா்ந்து இணையவழியில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் துறை வல்லுநா்களின் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ள ஆசிரியா்கள் இணையவழி பயிற்சியில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய அனுமதியை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.