சென்னை பல்கலை: முதுநிலை சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th September 2020 02:55 AM | Last Updated : 11th September 2020 02:55 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்: எம்.எல். ‘இன்டா்நேஷனல் லா அன்ட் கான்ஸ்டிடியூஷ்னல் லா’, ‘பிசினஸ் லா’, ‘கிரிமினல் லா’, ‘இன்டலெக்சுவல் பிராபா்ட்டி ரைட்ஸ் லா’, ‘ஹியூமன் ரைட்ஸ் அன்ட் என்விரான்மென்டல் லா’, ‘லேபா் அன்ட் அட்மினிஸ்ட்ரேஷன் லா’) போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. முதுநிலை சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.15 ஆகும். இதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.