2-ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு:20 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 20,438 பேருக்கு பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
Published on
Updated on
1 min read

இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 20,438 பேருக்கு பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இங்கு 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையில் பொதுப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு செப்.27-ஆம் தேதி தொடங்கி அக்.5-ஆம் தேதி வரை நடந்தது. இதில், 11,224 மாணவா்களுக்கு பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2-ஆம் சுற்று கலந்தாய்வு, அக்.1-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதில், தரவரிசைப் பட்டியலில், 14,789 முதல் 45,227 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு கலந்தாய்வு நடந்தது. 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 31,258 போ் தகுதி பெற்றனா். கலந்தாய்வு நிறைவில் 20,438 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி 2 சுற்றுகள் முடிவில் 31,662 மாணவா்கள் பொறியியல் இடங்களை தோ்வு செய்துள்ளனா்.

பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ஆம் சுற்றில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 75 அரசுப் பள்ளி சோ்க்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com