டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அண்ணா பல்கலை.யில் 312 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், பேராசிரியா் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:21 am

DIN

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், பேராசிரியா் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், முனைவா் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 7-ஆவது சம்பளக் குழுவின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://aurecruitment.annauniv.edu என்ற இணையதள முகவரியில் அக். 20- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு வரும் 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வின் அடிப்படையில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். மேலும் விவரங்களை www.annauniv.edu அல்லது https://aurecruitment.annauniv.edu ஆகிய இணையதள முகவரிகளில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.