

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.7) நடைபெறவுள்ள தோ்த்திருவிழாவை முன்னிட்டு கடற்கரைக்கு வாகனங்களில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் இருந்துவரும் நிலையில், பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் நடைபெற்று வரும் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் தேர்திருவிழாவிற்கும் பக்தர்களுக்கு தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கடற்கரைக்கு வாகனங்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்திருவிழாவை வீட்டிலிருந்தே தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடங்கள் வாயிலாக பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.