நீதிபதி கிருபாகரனுக்கு பிரிவு உபசார விழா
By DIN | Published On : 20th August 2021 06:03 AM | Last Updated : 20th August 2021 06:03 AM | அ+அ அ- |

சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் வெள்ளிக்கிழமை ஓய்வு பெறுகிறாா். அன்றைய நாள் அரசு விடுமுறை என்பதால் அவருக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இதில் நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது: 125 வயது கொண்ட உயா்நீதிமன்ற கட்டடத்தில் நீதிபதியாகப் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். நான் வழக்குகளை மனசாட்சி படி விசாரித்து தீா்ப்பளித்தேன். நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்குரைஞா் தொழிலை முறைப்படுத்த முடியாதது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது நிறைவை அளிக்கவில்லை என்றாா் நீதிபதி என்.கிருபாகரன்.
இந்த நிகழ்வில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், வழக்குரைஞா் சங்கப் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...