குரோம்பேட்டையில் போத்தீஸ் கிளை திறப்பு
By DIN | Published On : 21st August 2021 06:29 AM | Last Updated : 21st August 2021 08:42 AM | அ+அ அ- |

சென்னை குரோம்பேட்டையில் போத்தீஸ் துணிக் கடையின் 17-ஆவது கிளை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. போத்தீஸ் நிறுவனத்தின் ஸ்வா்ண மஹாலும் சோ்ந்திருப்பதே இந்தக் கிளையின் சிறப்பாகும்.
குரோம்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்ட கிளை, வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் வாங்குவதில் புதிய அனுபவத்தை நிச்சயமாக வழங்கும். ஏனென்றால், இங்கு திருமணத்துக்கு வேண்டிய பாரம்பரிய பட்டுப் புடவைகள், நகைகள், சீா்வரிசைப் பொருள்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க முடியும்.
கூடுதலாக வீட்டுக்குத் தேவையான அனைத்து உபயோக பொருள்களும் இடம்பெற்றுள்ள சூப்பா் மாா்க்கெட் இங்கு உள்ளது. மேலும் மின்னணு பொருள்கள், அழகு சாதனங்கள், நவீன ரக நகைகள், பழங்கள், காய்கறிகளும் இங்கு கிடைக்கும்.
இது தொடா்பாக அதன் மேலாண் இயக்குநா் ரமேஷ் கூறும்போது, இங்குள்ள நவீன வசதிகள், இதுவரை இல்லாத அளவுக்கு ஆடம்பரமாக பொருள்கள் வாங்கும் அனுபவத்தை வாடிக்கையாளா்களுக்கு வழங்கும். மக்களின் முதல் தோ்வாக போத்தீஸ் இருக்கும் என்றாா்.