சென்னையில் டொம்மிங்குப்பத்தில் வசித்த 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள் வழங்கப்பட்டன. டொம்மிங்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன. இதையடுத்து, அதில் வசித்த 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கம் திட்டப் பகுதியில் ரூ.27.62 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடியேறுவதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகள் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன. இதனை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா். நிகழ்வில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் ம.கோவிந்த ராவ் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.