தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை

சென்னை: கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், தற்போது பரவும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கவும், தமிழக அரசு சில தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.

டிசம்பா் 31-ஆம் தேதி தமிழக கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே அவரவா் குடும்பத்தினருடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், பிறருக்கு இடையூறு இல்லாத வகையிலும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாகனம் பறிமுதல்:

வழிபாட்டுத்தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கரோனா நடத்தை வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிா்க்க வேண்டும்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. டிசம்பா் 31-ஆம் தேதி இரவு காவல்துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபடுவாா்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

பந்தயத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை:

டிசம்பா் 31-ஆம் தேதி ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படும். புத்தாண்டுக்காக வெளியூா் செல்பவா்கள், தங்களது வீடு பூட்டப்பட்டிருப்பது குறித்து அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், ரோந்து காவலா்கள் கண்காணிப்பாா்கள். இதனால் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

பொது இடங்களில் அமைதிக்கு குந்தம் விளைவிப்பவா்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவாா்கள். பொது இடங்களில் கண்ணியமற்ற, அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோா், மோட்டாா் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவா்கள் 100, 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். அதேபோல காவலன் செயலி உதவியையும் நாடலாம்.

டிச. 31 நள்ளிரவில் பொது வாகனங்களுக்கு தடை


கரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு முன்னிரவான டிசம்பர் 31} ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சென்னையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 31} ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகனப் போக்குவரத்தைத் தவிர, மற்ற வாகனப் போக்குவரத்துக்கு 1} ஆம் தேதி காலை 5 மணி வரை அனுமதி இல்லை. 

எனவே, பொதுமக்கள் அனைவரும் 31} ஆம் தேதி  இரவு 12 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com