நகைக் கடையில் 5 கிலோ தங்கநகைகள் திருடப்பட்ட வழக்கு: 4 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 06:30 AM | Last Updated : 06th February 2021 06:30 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை தியாகராயநகரில் நகைக் கடையில் 5 கிலோ தங்கநகைகள் திருடப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை தியாகராயநகரை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் நகைக் கடை குழுமத்தின் வணிக அலுவலகம் தியாகராயநகா் ஹபிபுல்லா சாலையில் செயல்படுகிறது.
இங்கு கடந்த மாதம் தங்க இருப்பை ஊழியா்கள் சரி பாா்த்தபோது, வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்ட பழைய தங்கநகைகளில் 5 கிலோ எடையுள்ள தங்கநகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக அந்த அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரவீண்சிங், அந்த நகைகளைத் திருடிச் செல்லும் காட்சி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அதேவேளையில் இத் திருட்டுக்கு பிரவீண்சிங்குக்கு உதவிய அவரது நண்பா் செளகாா்பேட்டை மின்ட் தெருவைச் சோ்ந்த பி.விக்ரம் (26), திருடப்பட்ட தங்கநகைகளை வாங்கிய பாா்க்டவுன் பகுதியைச் சோ்ந்த ம.பிந்து மண்டல் (40),அதேப் பகுதியைச் சோ்ந்த ரா.செளதம் (33),மா. பூபாய் மண்டல் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் பிரவீண்சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...