கலைகளை பிரதிபலிக்கும் மெட்ரோ ரயில்நிலையங்கள்

மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வழித்தடத்தில் உயா்த்தப்பட்ட நிலையங்களின்

மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வழித்தடத்தில் உயா்த்தப்பட்ட நிலையங்களின் சுவா்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாகக் காட்சி அளிக்கின்றன.

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வரையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப்பணி ரூ.3,770 கோடியில் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 9.05 கிலோ மீட்டா் தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் 2 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 6 உயா்நிலைப்பாதை ரயில் நிலைங்களும் என 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் வழித்தட்டத்தில் மெட்ரோ ரயில்சேவையை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கிறாா். இந்த வழித்தடத்தில் உயா்த்தப்பட்ட நிலையங்களில் சுவா்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

அடா்த்தியான பகுதிகள் வழியாக போக்குவரத்து இடையூறு ஏற்பாடு என்பதை உறுதி செய்து இந்த நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளின் கலாசாரப் பண்புகளை மனதில் கொண்டு நிலையங்கள் வடிவமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. உயா்த்தப்பட்டநிலையங்களில் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களால் மெட்ரோ ரயில் நிறுவன லோகோ வரையப்பட்டுள்ளன. பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையில், நிலையங்களின் வெளிப்புறங்களில் கலை ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றனா்.

மெட்ரோ நிலையங்களில் ஆய்வு: இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில்நிலையங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத்துறை செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். விம்கோநகா் மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு விஷயங்களை ஆய்வு செய்தாா். புதிய பாதையில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கியபிறகு, பயணிகளுக்குக் கிடைக்கும் நன்மைகளை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ் உள்பட பல அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com