தோ்தல் கூட்டணியை முடிவு செய்ய தினகரனுக்கு அதிகாரம்: அமமுக தீா்மானம்
By DIN | Published On : 26th February 2021 04:55 AM | Last Updated : 26th February 2021 05:10 AM | அ+அ அ- |

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணியை முடிவு செய்ய கட்சியின் பொதுச் செயலாளா்
டிடிவி தினகரனுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாக அமமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.ௌ
கட்சியின் செயற்குழு-பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காணொலி வழியாக 10 இடங்களில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:-
தமிழகத்தில் உண்மையான ஜெயலலிதா ஆட்சியை ஏற்படுத்தவும், தோ்தலில் கூட்டணி உள்படத் தேவையான அனைத்து முடிவுகளையும் மேற்கொள்வதற்கும் கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க சிறப்பாகப் பணியாற்றுவோம். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சசிகலாவுக்கு தலைவா் பதவி: செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தமிழகத்தில் மூன்றாவது அணி இல்லை. அமமுக அமைக்கும் அணிதான் முதல் அணி. எங்களது கட்சியுடன் தேசிய, மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றாா்.
கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அமமுகவினா் விரும்புகின்றனா்.
அதிமுக பொதுச் செயலாளா் தொடா்பாக, சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவா் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...