தொழிலதிபா் வீட்டில் தங்கநகைத் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
By DIN | Published On : 04th January 2021 06:46 AM | Last Updated : 04th January 2021 06:46 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை துரைப்பாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
ஒக்கியம் துரைப்பாக்கம் ஒயிட் ரோஸ்காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் ரமேஷ்குமாா் (45). இவா் வீட்டில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் (33), அண்மையில் வேலையை விட்டு நின்றுள்ளாா்.
இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு ரமேஷ்குமாா், வீட்டின் பீரோவில் இருந்த பொருள்களை சரிபாா்த்தாா். அப்போது பீரோவில் இருந்து 30 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் ராஜகோபாலை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் ராஜகோபால், அந்த பீரோவை திறக்க கள்ளச்சாவி தயாா் செய்து, அதன் மூலம் தங்கநகைகளைத் திருடியிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா், ராஜகோபாலை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கநகைகளை மீட்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G