நாளை பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 30th January 2021 05:38 AM | Last Updated : 30th January 2021 05:38 AM | அ+அ அ- |

புறநகர் ரயில்
சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்தாகும் மின்சார ரயில்கள்: அரக்கோணம் -செங்கல்பட்டுக்கு காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டு -அரக்கோணத்துக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை-திருமால்பூருக்கு மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை கடற்கரை-காஞ்சிபுரத்துக்கு காலை 5.45 மணி, மாலை 6.40 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிகாலை 4.55 மணி, 6.25, 7.05, 7.40, பிற்பகல் 3 மணி, 3.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இந்த ரயில்களுக்கு பதிலாக, சென்னை கடற்கரை -சிங்கப்பெருமாள்கோவிலுக்கு அதிகாலை 4.55, 5.45, 6.25, 7.05, 7.40, பிற்பகல் 3 மணி, 3.50 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணி, 8.10, 8.50, 9.05, மாலை 5 மணி, 5.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கு பதிலாக, சிங்கப்பெருமாள்கோயில்-சென்னை கடற்கரைக்கு காலை 6.40 மணி, 7.35, 8.20, 9.00, 9.35, மாலை 5.10, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.