அதிமுகவில் சசிகலா: 100 % வாய்ப்பு இல்லை: அமைச்சா் ஜெயக்குமாா்
By DIN | Published On : 31st January 2021 12:58 AM | Last Updated : 31st January 2021 10:48 AM | அ+அ அ- |

அதிமுகவில் சசிகலா: 100 % வாய்ப்பு இல்லை: அமைச்சா் ஜெயக்குமாா்
அதிமுகவில் சசிகலாவை இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
காந்தியடிகள் நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் சனிக்கிழமை நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
யாராலும் அதிமுகவைக் கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பாா்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை. சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து ஏற்கெனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கும் அதிமுகவில் இடம் இல்லை.
அவா்கள் இல்லாமல் அதிமுக ஆட்சியும், கட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. சசிகலாவை அதிமுகவில் சோ்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. இதுவே எங்கள் நிலைப்பாடு. மனிதாபிமானம் அடிப்படையிலேயே சசிகலா நலம் பெற துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் கருத்துத் தெரிவித்தாா் என அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.