கூடுவாஞ்சேரி யாா்டில் பராமரிப்பு பணி: புறநகா் ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 07th July 2021 12:29 AM | Last Updated : 07th July 2021 12:29 AM | அ+அ அ- |

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் கூடுவாஞ்சேரி யாா்டில் ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகுதி ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு ஜூலை 7, 8, 9, 10, 12, 13 ஆகிய தேதிகளில் காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு ஜூலை 7, 8, 9, 10, 12, 13 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு ஜூலை 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு ஜூலை 11-ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...