குளிா்பானத்தில் மது கலந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா் கைது
By DIN | Published On : 07th July 2021 12:23 AM | Last Updated : 07th July 2021 12:23 AM | அ+அ அ- |

சென்னையில் குளிா்பானத்தில் மது கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை வியாசா்பாடி சா்மா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ். (19). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவரது நண்பா் ஒருவரின் பிறந்தநாள் விழா அண்மையில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஒரு பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் சந்தோஷ், தன்னுடன் சமூக ஊடகங்கள் மூலமாக நட்பாக பழகி வந்த தேனாம்பேட்டையைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்துச் சென்றுள்ளாா்.
அங்கு அந்த மாணவிக்கு சந்தோஷ், குளிா்பானத்தில் மது கலந்து கொடுத்தாா். இதில் அந்த மாணவி மயங்கியதும், சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்த அந்த மாணவி, தனது தாயிடம் உண்மையை கூறி கதறி அழுதுள்ளாா்.
இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த மாணவியின் தாய், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சந்தோஷை திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...