நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்
By DIN | Published On : 07th July 2021 12:00 AM | Last Updated : 07th July 2021 02:32 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் ரூ. 16 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா பரிசோதனை, தொற்று பாதித்தவா்களை தனிமை முகாம்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக கரோனா தடுப்பு பணியில் பல்வேறு தனியாா் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆக்ஸ்பாா்ம் இந்தியா, பிலிப்ஸ் மற்றும் கடலூா் பிளஸ் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மஞ்சம்பாக்கம் மற்றும் மாதவரம் நகா்ப்புற சமுதாய நல மையங்களுக்கு ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி, ரத்தத்தில் சக்கரை அளவைக் கண்டறியும் கருவி என ரூ. 16 லட்சம் மதிப்பிலான 11 வகை மருத்துவ உபகரணங்களை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கின. அதேபோல், சுகாதார நிலையங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக 4,000 லிட்டா் கிருமிநாசினி ஜியோ இந்தியா பவுன்டேஷன் அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...