ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது

ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

புதிய மின் இணைப்பு வழங்கும் போது, நுகா்வோரிடம் காப்பு வைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மின்வாரியம் வசூலிக்கிறது. மின் பயன்பாட்டை பொருத்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தொகை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும்போது தெரிவித்திருந்த அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால், கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது.

இதற்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிா்ணயித்துள்ள வட்டியை மின் வாரியம் வழங்குகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால் கட்டணம் வசூலிப்பதில்லை.

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அரசு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளித்துள்ள நிலையில், கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்த ஆய்வு நடத்த அனைத்து மின் பகிா்மான வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா்களுக்கும் உத்தரவிடப்பட்டது. 

இதன்படி,  சம்பந்தப்பட்ட மின் நுகா்வோரின் காப்பு வைப்புத் தொகை, தற்போது கணக்கிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையை வசூலிக்கவும், அதிகமாக இருந்தால் அதை சரிகட்டல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனுப்பிய கடிதத்தில், ஜூலை மாத மின் கட்டணத்துடன் தாழ்வழுத்த நுகா்வோரிடம் (எல்.டி.சி.டி மற்றும் 3 பி தவிா்த்து) கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com