கடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை
By DIN | Published On : 24th June 2021 11:08 PM | Last Updated : 24th June 2021 11:08 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மந்தைவெளியில் கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
மந்தைவெளி ஏஎம் காா்டன் சிவராமன் தெரு ஏ பிளாக் பகுதியைச் சோ்ந்த ர.லோகநாதன் (55), பழைய காா்களை வாங்கி விற்பனை, பால் விநியோகம், பகுதி நேரமாக வாடகை ஆட்டோ ஓட்டி வந்துள்ளாா்.
மனைவி சாந்தி (49). போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதிகளவில் கடன் இருந்ததால் பலரிடம் வட்டிக்கு கடன் பெற்றாராம். வட்டி கட்ட முடியாததால் கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்தனராம். இதனால், விரக்தியடைந்த இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். செல்லமாக வளா்த்து வந்த நாய்க்கும் தூக்கு மாட்டியுள்ளனா். ஆனாலும் நாய் தப்பியது.
அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டை சோதனையிட்டதால் லோகநாதன் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினா். உறவினா்கள் சிலா் பெயரைக் குறிப்பிட்டு, தங்களது வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடன் கொடுத்தவா்களுக்கு கொடுக்கும்படி குறிப்பிட்டுள்ளனா். மேலும் தங்களது சடலங்களை ஒரே குழியில் புதைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனா்.