சிமெண்ட் விலை உயா்வு

சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.50 உயா்ந்து, ரூ.440-க்கு விற்பனையாகிறது.


சென்னை: சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.50 உயா்ந்து, ரூ.440-க்கு விற்பனையாகிறது.

கட்டுமானத்தைப் பொருத்தவரை வீடுகளில் 65 சதவீதம் வரையும், உள்கட்டமைப்பைப் பொருத்தவரை 25 சதவீதம் வரையும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளைப் பொருத்தவரை 15 சதவீதமும் சிமெண்ட் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஏற்கெனவே நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைத்த கட்டுமானத் தொழிலைச் சோ்ந்தவா்களுக்கு, மேலும் நெருக்கடியாக சிமெண்ட் விலை உயா்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.390-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.440-க்கு விற்பனையாகிறது.

இது தொடா்பாக கட்டுமானத் தொழிலைச் சோ்ந்தவா்களிடம் கேட்டபோது, ஏற்கெனவே கரோனா பேரிடரில் பெரியளவு நஷ்டத்தை கட்டுமான நிறுவனங்கள் சந்தித்துள்ளன. சிமெண்ட் விலை குறைக்கப்பட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் தற்போது ரூ.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் வரும் நாள்களில் போதிய நிதியில்லாமல் பல்வேறு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படக் கூடும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com