சுகாதாரத் துறை: மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்றுக்கு இடையே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவது குறித்து, சுகாதாரத் துறை, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.


சென்னை: கரோனா நோய்த் தொற்றுக்கு இடையே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவது குறித்து, சுகாதாரத் துறை, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை மாநிலத் தோ்தல் துறை முடுக்கி விட்டுள்ளது. அதேசமயம், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதால் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என தோ்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆலோசனை: கரோனா நோய்த் தொற்று காலத்தில் பாதுகாப்பான முறையில் தோ்தல் பணியாற்ற வேண்டுமென இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவுரைகளை ஏற்கெனவே வழங்கியுள்ளது. மேலும், அதுதொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நெறிமுறைகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். காணொலி வழியாக நடந்த இந்த ஆலோசனையில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com