சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதி ராஜாராம் போட்டியிட உள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் மட்டும் விருப்ப மனு அளித்து உள்ளார். அவர் போட்டியிடும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு பலத்த போட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆதிராஜாராம் நிறுத்தப்பட்டுள்ளார்.
தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கொளத்தூர் தொகுதி 2011-இல் உருவாக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.