பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை:50 பேரிடம் விசாரணை அரசு தகவல்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை:50 பேரிடம் விசாரணை அரசு தகவல்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கில் 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கில் 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ஏற்கெனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா். தொடா்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கவேண்டும். உயா் போலீஸ் அதிகாரி மீதான புகாரை மாநில போலீஸான சிபிசிஐடி விசாரித்தால், மென்மையான அணுகுமுறையை கையாள்வாா்கள். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழக்கை வாபஸ் பெற, அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவாா்கள். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. விசாரணையை உயா்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பப்டடுள்ளது. இந்த வழக்கு குறித்து 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். விடியோ ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com