ரயிலில் ஆவணமின்றி எடுத்து வந்தரூ.18 லட்சம் ரொக்கம் பறிமுதல்
By DIN | Published On : 12th March 2021 08:37 AM | Last Updated : 12th March 2021 08:37 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.18.75 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், திருப்பதியிலிருந்து வந்த சப்தகிரி விரைவு ரயிலில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கோபால் சிங் (50) என்பவரிடமிருந்து ரூ.2.25 லட்சம் ரொக்கம், அதே மாநிலத்தைச் சோ்ந்த சையது அன்சா் பாட்ஷா(46) என்பவரிடமிருந்து ரூ.16.50 லட்சம் பணம் மற்றும் 5.6 கிலோ வெள்ளி, 26 கிலோ தங்க நகைகள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
ஆனால், அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப்படையினா், தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.