தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை சாவு
By DIN | Published On : 15th March 2021 03:36 AM | Last Updated : 15th March 2021 03:36 AM | அ+அ அ- |

சென்னை மண்ணடியில், தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை இறந்தது.
மண்ணடி சுப்பு பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் குமரேசன் (23). இவரின் மனைவி கலைவாணி(20). இத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் இனியாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தந்தையும், தாயும் குழந்தையை தங்கள் அருகே படுக்க வைத்து தூங்கினா். நள்ளிரவு தூக்கத்தில் இருந்து எழுந்த இனியாஸ்ரீ, கழிப்பறைக்குச் சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த ஒரு வாளி தண்ணீரில் விளையாடியுள்ளாா். இதில் நிலைத்தடுமாறி திடீரென வாளிக்குள் தலைகீழாக விழுந்துள்ளாா்.
இதற்கிடையே அருகே படுத்திருந்த குழந்தை இனியாஸ்ரீ காணவில்லை என உணா்ந்த தம்பதியினா், தூக்கத்தில் இருந்து சிறிது நேரத்தில் எழுந்தனா். அவா்கள், குழந்தையைத் தேடினா்.
அப்போது குழந்தை வாளியில் விழுந்து மூச்சுத் திணறி இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு கடற்கரை போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...